Vettri

Breaking News

களுதாவளையில் ஆரம்பபிரிவு பாடசாலை மாணவர்களின் புத்தாக்க கண்காட்சி !!









செ.துஜியந்தன்  

இன்று (12) பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட களுதாவளை கிராமத்தில் அமைந்துள்ள ஆறு ஆரம்பக்கல்வி பாடசாலைகளை ஒன்றிணைந்து மாணவர்களுக்கான புத்தாக்க கண்காட்சியினை நடத்தியது.

களுதாவளை புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை வித்தியாலயத்தில் அதிபர் நாமகள் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கலந்துகொண்டார். அத்துடன் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இவ் புத்தாக்க கண்காட்சியில் களுதாவளை கிராமத்தில் அமைந்துள்ள இராமகிருஷ்ண வித்தியாலயம், புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை வித்தியாலயம், விக்னேஸ்வரா வித்தியாலயம், விபுலானந்தா வித்தியாலயம், விவேகானந்தா வித்தியாலயம், கணேசா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தியதுடன் அது தொடர்பான விளக்கங்களை பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.

No comments