Vettri

Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் மஜீத் காலமானார்!!




நூருல் ஹுதா உமர்

இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் (முழக்கம் மஜீத்) அவர்கள் காலமானார்.

நீண்டகாலமாக சாய்ந்தமருதில் அமைந்துள்ள தனது வீட்டில் சுகயீனமுற்றிருந்த அவர் வீட்டில் இன்று மாலை காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 09.00 மணி அளவில் இடம்பெறும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது

No comments