கட்டுரைப்போட்டியில் வெற்றியீட்டிய துறைநீலாவணை மகா வித்தியாலய இரு மாணவியர்கள்!!
பாறுக் ஷிஹான்
2024 தேசிய மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயல மத்தியஸ்த பிரிவினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் கனிஷ்ட பிரிவு மற்றும் சிரேஸ்ட பிரிவில் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலக பிரிவில் உள்ள பட்டிருப்பு வலயத்தில் உள்ள துறைநீலாவணை மகா வித்தியாலய மாணவர்கள் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
இதில் கனிஷ்ட பிரிவில் முதலாவது இடத்தை சுபராஜ் கிருஸ்டிகாவும் சிரேஸ்ட பிரிவில் இரண்டாவது இடத்தை ற.ஹஸ்தனியும் பெற்றுள்ளனர்.இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன் , நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் ஆஸாத், நீதி அமைச்சின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.முஹமட் அஜுன் உட்பட விசேட காணி மத்தியஸ்த சபை மற்றும் ஏனைய மத்திய சபைகளின தவிசாளர்கள்இமத்தியஸ்தர்கள்இஅபி விருத்தி உத்தியோகத்தர்கள் இஎனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இக்கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி, நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் துறைநீலாவணை மகா வித்தியாலய அதிபர் பிரதி, அதிபர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இதில் கனிஷ்ட பிரிவில் முதலாவது இடத்தை சுபராஜ் கிருஸ்டிகாவும் சிரேஸ்ட பிரிவில் இரண்டாவது இடத்தை ற.ஹஸ்தனியும் பெற்றுள்ளனர்.இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன் , நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் ஆஸாத், நீதி அமைச்சின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.முஹமட் அஜுன் உட்பட விசேட காணி மத்தியஸ்த சபை மற்றும் ஏனைய மத்திய சபைகளின தவிசாளர்கள்இமத்தியஸ்தர்கள்இஅபி

No comments