கல்முனை ஆதார வைத்தியசாலையில் துவி தசாப்த சுனாமி நினைவு தின நிகழ்வு!
சுனாமியில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுனாமி நினைவு தின வைபவம் இன்று (26) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்திய சாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மலர் மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிர் நீத்த உறவுகளுக்கான மௌனஅஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
கல்முனை ஆதார வைத்தியசாலையினால் சுனாமி அனர்த்த தினம் நினைவு கூறப்பட்டது. இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சுனாமி அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்றைய தினத்தின் நினைவாக வைத்தியசாலை வளாகத்தினுள் பணிப்பாளர் அவர்களுடன் சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரும் இணைந்து மரம் ஒன்றினை நட்டு வைத்தனர்.
இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments