Vettri

Breaking News

எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் உயிரிழப்பு!!




 யாழில் எலிக்காய்சல் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று (14) உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 நாட்கள் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அன்றைய தினமே நோயின் தீவிர நிலை உணரப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டது

No comments