எல்லை தாண்டிய மனிதாபிமான உதவி!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட
காரைதீவு பிரதேசத்திற்கு கல்முனை மாநகர சபையினர் வவுசர் மூலம் குடிநீரை இன்று வழங்கினர்.
இது எல்லை தாண்டிய மனிதாபிமான உதவியாக கருதப்படுகிறது. கல்முனை மாநகர சபை எல்லைக்குள் காரைதீவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாரதியே உதவியாளராகவும் நின்று சேவையாற்றி வருகிறார்.
கடந்த 12 நாட்களாக ஆலயங்கள் பிரதேச சபை பொது அமைப்புகள் இராணுவம் தனியார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கி வந்தன.
No comments