பாண்டிருப்பு சிறுவர் நம்பிக்கை நிலையம் பாலர் பாடசாலையின் ஆண்டு இறுதி விழா!!
பாண்டிருப்பு சிறுவர் நம்பிக்கை நிலையம் பாலர் பாடசாலையின் ஆண்டு இறுதி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
சிறுவர் நம்பிக்கை நிலையத்தின் தலைவர் வே.இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாலர் பாடசாலை முகாமையாளர் இரா.தர்மலிங்கம், பாண்டிருப்பு மகா விஷ்ணு வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.அசோக்குமார், கிராமசேவகர் வி.டினோசன், கலாசார உத்தியோகத்தர் க.சுஜீத்திரா, ஊடகவியலாளர் அகரம் செ.துஜியந்தன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துஷானந்தன் உட்பட ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கு இம்முறை தரம் ஒன்றுக்கு செல்லும் மாணவர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கிகெளரவிக்கப்பட்டதுடன். மாணவர்களால் நடனம், பாடல், அபிநயம் நாடகம் போன்ற கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன்
No comments