இ.போ.சபை முதற் தடவையாக கல்முனையிலிருந்து கொழும்புக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்சேவை!
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலையினால் இன்று திங்கட்கிழமை முதல்
முற்றிலும் குளிரூட்டப்பட்ட பஸ் சேவை முதல் தடவையாக ஆரம்பிக்கப்படுகிறது என்று சாலை முகாமையாளர் வி.ஜௌபர் தெரிவித்தார்.
இந்த பஸ் சேவையானது இரவு 10.30 மணிக்கு கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலயம் சென்று
தொடர்ந்து கொழும்பு பிரதான பஸ்தரிப்பு
நிலையம் சென்றடையும்.
இந்த பஸ் வண்டியில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் பயணச்சீட்டினை
பெறுவதற்கு கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலும் மற்றும் ஒன்லைன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் .
ஒரு வழிப் பயணத்திற்கு 2398.50 ( முற்பதிவு உட்பட) அறவிடப்படும்.
மேலதிக விபரங்களுக்கு:--
0672229281
0672220438 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள் என அவர் கேட்டுள்ளார்.
விரைவில் மேலுமொரு பஸ் கிடைக்கும் பட்சத்தில் ஒரே வேளையில் இரு வழிப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இதேவேளை, இது போன்று கல்முனையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இத்தகைய குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவையொன்றை கல்முனை பஸ் சாலை நடாத்த முன்வரவேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments