பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க கல்முனைக் கிளையின் வருடாந்த ஒன்று கூடலும் கௌரவிப்பு நிகழ்வும்!!
நூருல் ஹுதா உமர்
இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கல்முனை கிளையின் வருடாந்த ஒன்று கூடலும் பொதுச் சுகாதார பரிசோதகர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்றவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் சனிக்கிழமை அக்கரைப்பற்று மெங்கோ கார்டனில் இடம்பெற்றது.சங்கத்தின் தலைவரும் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகருமான ஜே.எம்.நிஸ்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகவும், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்கள்.
இதன்போது இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கல்முனை கிளையின் மேலங்கி (T-Shirt) அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் மிக நீண்டகாலமாக பொதுச் சுகாதார பரிசோதகர்களாக பணியாற்றி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்று செல்லும் ஐ.எல்.றாசிக், அப்பாஸ் எம்.நியாஸ், சீ.பி.எம்.ஹனிபா ஆகியோர் அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் பல்வேறு அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் சுகாதாரத்துறைக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆற்றிவரும் அளப்பெரும் சேவை குறித்து பாராட்டி பேசிய பிராந்திய பணிப்பாளர், சகல பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் அவர்களது அலுவலக பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காக Official bag ஒன்றினையும் இந்நிகழ்வின் போது வழங்கி வைத்தார்.
No comments