Vettri

Breaking News

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதியை மேற்கொள்ளும் சாத்தியம்!!




 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், வாகன இறக்குமதியை மேற்கொள்ள முடியுமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் முக்கியஸ்தர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அடுத்த வருட முற்பகுதியில் வாகன இறக்குமதிக்கான உரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே,

பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.

தற்போதைய அரசாங்கம் எமக்கு கொள்கை ரீதியாக வாகன இறக்குமதிக்கான அனுமதியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

அதன்படி, நாம் வாகனங்களை இறக்குமதி செய்து வழங்கத் தயாராகவுள்ளோம். அதன்பின்னர் மக்கள் நியாயமான விலையில் நல்ல வாகனத்தை கொள்வனவு செய்ய முடியும்.

வாகன இறக்குமதிக்கான கொள்கையை தயாரிப்பதற்காக நிதியமைச்சும் குழுவொன்றை நியமித்துள்ளது.

பெப்ரவரி மாதம் முதல், வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கான பணத்தை ஒதுக்க மத்திய வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியமும் இணக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் வாகன இறக்குமதி இன்றி, 04 வருடங்களாக சுமார் 600 வாகன இறக்குமதியாளர்கள் அநாதரவாகியுள்ளனர். எனவே, உள்நாட்டு வர்த்தகர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments