கணக்காளரும் உதவி பிரதேச செயலாளரும் பொது நிருவாகத்தில் முதுமாணிபட்டம்!!
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் எஸ் .பார்த்திபன் மற்றும் கணக்காளர் ஏஎல்எவ்.. றிம்சியா ஆகியோர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொது நிருவாகத்தில் முதுமாணி பட்டத்தினை பெற்றுக் கொண்டனர்.
அதற்கான பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது .
இவர்களை காரைதீவு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
No comments