மாளிகா மனிதநேய உதவியாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!!
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவி வருகின்ற குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக மாளிகா மனிதநேய உதவியாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று 22 மாளிகை காடு அந்நூர் கலாச்சார மண்டபத்தில் காலை 8 மணி தொடக்கம் 3 மணி வரை இடம்பெற்று வருகின்றது.
இவ் இரத்ததான நிகழ்வில் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்களும் கலந்து கொண்டு குருதி சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
பெருமளவான மக்கள் இரத்த தானம் செய்து கொண்டு வருகின்றனர்.
No comments