தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மந்தகதியிலே இயங்குகின்றது, நாடு ஆபத்தான நிலையில் உள்ளது- கோடீஸ்வரன் தெரிவிப்பு!!
வெற்றி நியூஸ் செய்தியாளர்.
காரைதீவு பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடும் கூட்டம் ஒன்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் தலைமையில் (22) அன்று காரைதீவு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் கூட்டத்திற்கு காரைதீவு பிரதேசத்தின் பொது அமைப்புகள், இளைஞர்கள், கோயில் தலைவர்கள், கட்சி ஆதரவாளர்கள் போன்ற 42 அமைப்புக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மக்களின் கருத்துக்களும், பிரச்சினைகளும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது.
இங்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களுக்கு சேவை செய்யும் அவர்களின் பிரச்சினைகளை மற்றும் அபிலாசைகளையும் கேட்டு அறியவும் மக்கள் பிரதிநிதியாகிய நான் கடமைப்பட்டுள்ளேன்.
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் தோல்வியுற்றிருந்தால் அம்பாறை மாவட்ட தமிழர்களின் அடையாளம் அழிக்கப்பட்டிருக்கும் 88 வாக்குகளினால் எமது மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே இதற்காக என்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும் என்னுடன் இணைந்து களத்தில் போராடி வாக்குகளை பெற்ற சக வேட்பாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இம்முறை எமது அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படாமல் விட்டிருந்தால் ஐந்து வருடம் அல்ல 50 வருடம் அல்ல 500 வருடமானாலும் எமது பிரதிநிதித்துவத்தினை பாதுகாத்திருக்க முடியாது. அம்பாறை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 130000 தமிழர்களின் வாக்குகள் உள்ளது. எனினும் அதில்33600வாக்குகள் மாத்திரமே எமக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
எனவே 75000மக்கள் வாக்குகளை அழிக்காமல் தமிழர்களின் இருப்பினை அளிக்க வேண்டும் என்பதற்காகவே உள்ளனர். எனவே இவர்களை ஒருபோதும் நாங்கள் கைவிட மாட்டோம். 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ள காலத்தில் ஒரு குடையின் கீழ் தமிழ் தேசிய கூட்டமைப்பு என இருந்து அனைத்து வாக்குகளை மக்கள் செலுத்தி 22 ஆசனங்களை பெற்றிருந்தோம். ஆனால் தற்போது பேரினவாத கட்சிகளுக்கு பின்னால் மக்கள் சென்று தனித்துவத்தினை இழந்து கொண்டிருக்கின்றோம். மக்களுடன் கலந்துரையாடி எதிர்காலத்தின் தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கும் உள்ளூராட்சி சபை தேர்தல் மாகாண சபை தேர்தல் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றி பெற வேண்டும். அத்துடன் யு பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளை மக்களிடம் கேட்டறிந்து பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியிலும் உரிய அமைச்சர்களுடன் ஜனாதிபதிகளுடனும் கலந்துரையாடி எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காகவே இக்கூட்டத்தினை ஒழுங்குபடுத்தினேன்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ் பிரதேசங்களிலும் இவ்வாறான கூட்டங்கள் நடைபெறும் நடைபெறும்.
எதிர் வருகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் நாங்கள் பெரும் சவால்களுக்கு உள்ளாக உள்ளோம் காரைதீவு பிரதேச சபை தேர்தலில் 67 விதமான தமிழர்களின் வாக்கு உள்ள நிலையில் பிரிந்து எமக்குள் ஒற்றுமை இல்லாமல் செயல்பட்டால் காரைதீவு பிரதேச சபை மாற்று இனத்தவர்களிடம் சென்று விடும் எனவே சரியான நபர்களை தெரிவு செய்து வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெறச் செய்து தனித்துவத்தினை பாதுகாக்க வேண்டும்.
நாங்கள் தமிழரசு கட்சியாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பாகவும் சென்ற காலங்களில் பல தவறுகளை விட்டுள்ளோம் எனவே அவ்வாறான தவறுகளை திருத்தி மீண்டும் தனித்துவமாக பயணிக்கவுள்ளோம். தற்போதைய அரசாங்கம் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.
தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது.மந்த கதியிலே அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கின்றது அரசாங்கத்திடம் பொருளாதாரமில்லை. மற்றைய நாடுகளுக்குச் சென்று பணத்தினை பெற்று வர வேண்டிய தேவை உள்ளது. பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிப்பது இலகு கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தில் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் எனக் கூறி இருந்தார்கள். ஆனால் செய்யவில்லை கூறுவது இலகு நடைமுறைப்படுத்துவது கடினம். நாங்கள் தற்போது பொருளாதார ரீதியில் பெரும் ஆபத்தான நிலையில் உள்ளோம் என தெரிவித்தார்..
No comments