கனடா பாடும் மீன்கள் சமூகம் உலருணவு விநியோகம்!!
( வி.ரி. சகாதேவராஜா)
கனடா பாடும் மீன்கள் சமூகம் கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தொகுதி உலருணவுப் பொதிகளை விநியோகிக்க உள்ளது.
அண்மையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்ப்பட்ட பெரு மழை வீழ்ச்சி காரணமாக, தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து அல்லலுறும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்குகிற இச் சேவை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கனடா பாடும் மீன்கள் சமூகத்தில்
வெள்ள நிவாரண செயல் திட்ட நிதிப்பிரிவு இணணப்பாளர்
நித்தி சிவானந்தராஜா
இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிவாநந்த பழைய மாணவர் சங்கம் இத் திட்டத்தை நடைமுடைப்படுத்தும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பூலாவெளி (கிரான்)
வெல்லாவெளி பிரிவு மக்களுக்கும்
அம்பாறை மாவட்டத்தில்
திருக்கோவில்
ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கும் இவ் உதவி கிடைக்கப்பெறவுள்ளது என இணைப்பாளர் நித்தி சிவானந்தராசா மேலும் தெரிவித்தார்.
No comments