Vettri

Breaking News

விபுலானந்தாவில் விடுகைவிழா!!













( காரைதீவு சகா)
காரைதீவு விபுலானந்தா மொன்டி சோரி முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா நேற்று முன்தினம்  மாலை சிறப்பாக நடைபெற்றது.

பெற்றோர்கள் ஏற்பாட்டில்   நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலைப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

 கௌரவ அதிதிகளாக மொன்டிசோரி ஆசிரியர்களான ஜெயநிலந்தினி மற்றும் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக மாணவர்கள் வெற்றிலை கொடுத்து மலர் மாலை அணிவித்து வரவேற்று ஆசி பெற்றனர் .

மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பயின்ற  மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
பெற்றோர்கள் சார்பில் எஸ். சுஜிவன் நன்றியுரையாற்றினார்.

No comments