ஐஸ் போதைப்பொருளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது!
பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 3.00 மணியளவில் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல்கிராமம் 01 பகுதியில் சம்மாந்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சம்மாந்துறை சென்னல்கிராமம் 01, பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 240 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரத்னமல்லவின் பணிப்புரைக்கமைய உப பொலிஸ் பரிசோதகர்களான ஜெயஸ்ரீ மற்றும் விஜயஸ்ரீ ஆகியோரினால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments