Vettri

Breaking News

கார்த்திகைத் தீபங்களால் மூழ்கிக் காணப்படும் தமிழர் பிரதேசம்!!




கார்த்திகை தீபம் தமிழர்களின் பழமையான பண்டிகையாகும். சிவபெருமானை ஆராதிப்பதற்காகவும், அவரிடமிருந்து ஆசிகள் பெறுவதற்காக இவ்விரதத்தை அனுஸ்டிக்கிறோம்.கூடவே முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும்.

குமாராலய தீபம் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இன்று சனிக்கிழமை சர்வாலய தீபம் கொண்டாடப்பட்டதோடு நேற்றும்(13)இன்றும்(14) மிக சிறப்பாக வீடுகளில் விளக்கில் நெய், நல்லெண்ணெய், பஞ்சதீப எண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி  வீடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்பட்டது

தொடர்ந்து இறைவனுக்கு பிரசாதங்களாக கிழங்கு வகைகள், பலகாரங்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றை படைத்து வழிபட்டனர் அத்துடன் கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் பிரபலமாக திருவண்ணாமலையில் கொண்டாடப்படுவது ம் குறிப்பிடத்தக்க விடயமாகும்.














No comments