Vettri

Breaking News

ஏறாவூர் நகர சபை பொது நூலகத்திற்கு தேசிய விருது!!






எம்.எஸ்.எம். றசீன்

ஏறாவூர் நகர சபை நிருவாகத்தின் கீழ் இயங்கும் ஏறாவூர் பொது நூலகம் நகர சபை நூலக பிரிவின் கீழ் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

2023 தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளையொட்டியதாக தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் நடாத்தப்பட்ட மதிப்பீட்டின் போதே நமது ஏறாவூர் பொது நூலகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத விருது வழங்கும் விழாவில் இதற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நகர சபை செயலாளர் 
எம்.எச்.எம். ஹமீம், நூலகர் ஏ. எம்.ஜெஸ்மின் ஹப்ஸா, நூலக உதவியாளர்களான பி.என். எஃப். றிசாதா மற்றும் எம்.ஜே.எம். சுஐப் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

No comments