சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனையில் நடைபவனியும் விழிப்புணர்வு செயலமர்வும்!!
மாளிகைக்காடு செய்தியாளர்
சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய பாலியல் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு ஏற்பாடு செய்த நடைபவனியும் விழிப்புணர்வு செயலமர்வும் திங்கட்கிழமை (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.பிராந்திய பாலியல் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எல்.ஜலால்டீனால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.
"உரிமைப் பாதையில் செல்" எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் கள், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், பிராந்திய பிரிவு தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார நிறுவனங்களின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், மாவட்ட எயிட்ஸ் குழு உறுப்பினர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகீலா இஸ்ஸதீன், பிராந்திய பாலியல் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எல்.ஜலால்டீன், சம்மாந்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம்.ஹில்மி ஆகியோர் விரிவுரை ஆற்றினார்.
சர்வதேச எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 1ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், HIV யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் அதனால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments