Vettri

Breaking News

நாளை காரைதீவில் துவி தசாப்த சுனாமி தின ஆத்ம சாந்தி பிரார்த்தனை!






(வி.ரி.சகாதேவராஜா )

இந்துசமுத்திரத்தை உலுக்கிய ஆழிப்பேரலைக்கு நாளை (26) வியாழக்கிழமை அகவை இருபதாகிறது. அதாவது இரு தசாப் காலமாகிறது.

அதனையொட்டி நாடெங்கிலும் துவி தசாப்த சுனாமி தின வைபவங்கள் நடாத்த பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைதீவில் 2004 சுனாமியில் உயிர்நீத்த 867 பேரை நினைவுகூர்ந்து வருடாவருடம்  காரைதீவு கடற்கரையில் றிமைன்டர் விளையாட்டு கழகத்தினரால் நிறுவப்பட்ட நினைவுத்தூபி முன்றலில் பொதுவான வைபவம் நடைபெறுவது வழக்கம்.

அந்த நிகழ்வு இம்முறையும் நாளை (26) வியாழக்கிழமை காலை இந்து சமய விருத்திச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு ஆத்மார்த்த சுனாமி ஒளிதீபம் ஏற்றுவதோடு அஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் இடம்பெறும் என்று சங்க செயலாளர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.

No comments