தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில்பதிவிட்ட நபருக்கு பிணை!!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞருக்கு பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில்
முற்படுத்தப்பட்டார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 72 மணி நேர விளக்கமறியலுக்குப் பின்னர் இளைஞன் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நீதவான் விடுவித்ததுடன் வெளிநாட்டு பயணத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.
No comments