Vettri

Breaking News

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!




 நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. 

 
அத்துடன், எல்ல - நமுனுகுல தொழிற்சாலைப் பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

No comments