பாண்டிருப்பில் மகரஜோதிப் பெருவிழாவும் மண்டல பூசையும்
செ.துஜியந்தன்
பாண்டிருப்பு மஹா விஷ்ணு ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஐயன் ஐய்யப்பனின் இருபத்தி நான்காவது மகரஜோதிப் பெருவிழாவும் மண்டல பூசையும் இன்று 26 இடம்பெற்றது.
காலை 7 மணிக்கு ஐயப்ப ஹோமம், 108 சங்காபிஷேக நிகழ்வின் பிற்பாடு மண்டல பூசை ஆரம்பமாகும். அதன் பின் குரு ஆசீர்வாதம், ஐயப்ப சுவாமிமார்களின் பஜனை ஆகியன நடைபெற்று தர்மசாஸ்தா யாத்திரிகர் பேரவையின் குருசாமி ஜெ.ஜெசீந்திரகுமார் மற்றும் ஆலய குருவினாலும் பூஜைகள் நடாத்தி வைக்கப்பட்டது. இறுதி நிகழ்வாக விபூதிப் பிரசாதம் வழங்கப்பட்டு மதியம் மகேஸ்வர பூசை நடைபெற்றது.
வருடாந்தம் பாண்டிருப்பில் ஐய்யப்பன் சுவாமியின் மகரஜோதிப்பெருவிழா குருசாமி ஜெசீந்திரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments