Vettri

Breaking News

பாடசாலைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!!






(எஸ். சினீஸ் கான்)

பாடசாலைகளின் தேவைகள், குறைபாடுகளை அறிந்து நிவர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து பாடசாலைகளுக்குமான கள விஜயம் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நேற்று (10) நிந்தவூர் பதுரியா வித்தியாலம் மற்றும் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயம் ஆகியவற்றிற்கு நேரடியாகச் சென்று அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்ததுடன் மாணவர்களின் தேவைகள், குறைபாடுகளை அறிந்து செயலாற்றும் நோக்கில் “குறைகேள் பெட்டி” கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் போது பதுரியா வித்தியாலயத்தின் அதிபர் மெளலவி ஜெசீர் அலி தலைமையில் பாடசாலைச் சமூகத்தினரால் பாராளுமன்ற உறுப்பினர் மாலை அணிவிக்கப்பட்டு பூச்செறிந்து வரவேற்கபட்டதுடன்  ஆசிரியர்கள் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்  தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அதேபோல் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தின் அதிபர் ஜாபிர் தலைமையில் பாடசாலை மாணவர்களினால் பேன்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு, மாலை அணிவித்து பூச்செறிந்து வரவேற்பளிக்கப்பட்டிருந்ததுடன் உயர்தர பிரிவு மாணவர்களின் வகுப்பறை பெளதீக குறைபாடுகளை நேரடியாக அழைத்துச் சென்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

No comments