மகிழூரில் சிறுவர் மகிழ சிறுவர் நூலகம் திறப்பு விழா!!
( வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட
மகிழூர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலக வளாகத்தில் கடந்த (27/12/2024)சிறுவர் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினத்தின் ஆலோசனைக்கிணங்கவும், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரனின், வழிகாட்டுதலுக்கு அமைவாகவும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களான ம. புவிதரன் , செ.சக்திநாயகம் ஆகியோரின் ஒருங்கிணைப்பினால் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் சிறுவர் நூலகம் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரனினால் திறந்துவைக்கப்பட்டது.
இச் சிறுவர் நூலகத்தினை சக்தி சிறுவர் கழகத்தினர் பராமரிப்பு செய்வதற்கு ஒப்படைக்கப்பட்டது.
இன்றைய காலத்தில் சிறுவர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் முறையான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமையினால் வழி தவறிப் போகக்கூடிய வாய்ப்பு அதிகம் காணப்படுவதால் தமது ஓய்வு நேரங்களை வீதியோரங்களில் கழிக்கின்ற நிலமையும், கையடக்க தொலைபேசி பாவனையில் மூழ்கி இருக்கின்ற நிலைமையும் அவதானிக்கப்பட்டதையடுத்து இன் நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இந் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த வருடம் மகிழூர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு நான்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மூலம் சிறுவர் சிநேகபூர்வ முன்மாதிரி கிராமமாக தெரிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திறப்பு விழாவின் போது சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர், திட்டமிடல் அபிவிருத்திய உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் கழகங்களின் தலைவர் ஏனைய பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், ஆலய பரிபாலன சபையின் தலைவர், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுவின் தலைவர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments