யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் ஏழு பேர் பலி; 58பேர் பாதிப்பு!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை எலிக் காச்சல் நோயினால் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பெரும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பெரும், மருதங்கேணி பிரிவில் 6 பெரும், சாவகச்சேரி பிரிவில் 4 பெருமாக இதுவரை 58 பேர் எலிக்காச்சல் நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 7 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில் 6 இறப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது.
எலிக்காச்சல் நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்
No comments