சங்கர்புரத்தில் நடைபெற்ற 3 Zero House திறப்பு விழாவும் பொலித்தீன் பாவனை விழிப்புணர்வும
( வி.ரி.சகாதேவராஜா)
சங்கர்புரத்தில் 3 Zero House திறப்பு விழாவும் பொலித்தீன் பாவனையை இல்லாதொழித்தல் விழிப்புணர்வும் மிக சிறப்பாகவும் முன்மாதிரியாகவும் நடைபெற்றது.
சங்கர்புரம் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் ACTED நிறுவனத்தின் வழிகாட்டலோடு இந்நிகழ்வு இடம்பெற்றது.
அக்ரட் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட உத்தியோகத்தர் இ.கஜன், கிராம சேவகர் சத்தியநாராணன், விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன், பொது சுகாதார பரிசோதகர் ரீ.ரிஷிகோபன் குடும்ப நல உத்தியோகத்தர் முதீதாகுமாரி, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் த.தரணிதரன், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மரணாதார சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளாக இயற்கையான இல்லம், கழிவு முகாமைத்துவம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, கூட்டெரு தயாரிப்பு என சூழலுக்கு நேயமான செயற்பாடுகள் அனைத்தும் மாதர் சங்கத்தினால் மிக சிறப்பாக நடாத்தப்பட்டிருந்தது. 2025 ம் ஆண்டிலிருந்து தங்களது வீடுகளில் பொலித்தீன் பாவனை இல்லாத சூழலை உருவாக்குவோம் எனவும் கலந்து கொண்ட அனைத்து அதிதிகள் மற்றும் சங்கர்புரம் கிராம மக்களும் உறுதி பூண்டு கொண்டனர்.
No comments