கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 வது கொடியேற்ற விழா!
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்காவில் 203 வது கொடியேற்று விழா இன்று (2) திங்கட்கிழமை ஆரம்பமானது.
உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிர்வாகிகள், ஊர் மக்கள் புடைசூழ கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இருந்து புனித கொடியானது தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்கா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள், உலமாக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments