பாரிய மாற்றத்துடன் 2025 இல் கிழக்கு மாகாண இலக்கிய விழா நடைபெறும்; கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் நவநீதன் தெரிவிப்பு!!
( வி.ரி.சகாதேவராஜா)
2024ம் ஆண்டுவரை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்
திணைக்களத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்தப்பட்டு வந்த
'அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கம் மற்றும் கலை
இலக்கிய போட்டி' நிகழ்வுகளானது 2025ம் ஆண்டுமுதல் திறந்த
போட்டியாக மாற்றியமைக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் இத் தகவலைத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2025ம்
ஆண்டில் நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் பரிசுகள் வழங்கி
கௌரவிப்பதற்காகவும், அதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் கலை
இலக்கிய செயற்பாட்டினை ஊக்குவிப்பதற்காகவும் பின்வரும்
தமிழ்மொழி மூல போட்டி நிகழ்வுகளில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த
அனைத்து தமிழ் மொழிமூல எழுத்தாளர்களும், இலக்கிய
செயற்பாட்டாளர்களும், ஏனைய ஆர்வமுள்ள அனைவரும் கலந்து
கொள்ள முடியும்.
போட்டி நிகழ்வுகள் :
1. புதுக்கவிதை 2. மரபுக்கவிதை
3. சிறுகதை 4. குறும்பட பிரதியாக்கம்
4. புகைப்படம் 5. பட்டி மன்றம்
5. ஓவியம் 6. கரோகி பாடல்
7. கிராமிய நடனம் 8. கலப்பு நடனம்
மேற்படி நிகழ்வுக்கான போட்டி நிபந்தனைகளையும்
விண்ணப்ப படிவங்களும் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச
செயலகங்களில் கடமையாற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்கள
கலாசார உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
No comments