150,000 ஐ கடந்தது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!!
இந்த மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 150,000 ஐ கடந்துள்ளது.
அந்த காலப்பகுதியினுள் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இதன்படி, இந்தியாவிலிருந்து மாத்திரம் 35,131 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 19 லட்சத்து 66 ஆயிரத்து 256 பேர் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
No comments