இரண்டு வாரங்களில் லங்கா சதொச ஊடாக 15 இலட்சம் தேங்காய்கள் மக்களுக்கு!!
எதிர்வரும் இரண்டு வாரங்களில் லங்கா சதொச ஊடாக 15 இலட்சம் தேங்காய்களை மக்களுக்கு வழங்கவுள்ளதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள சதொச கிளைகளில், தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கான வசதி நுகர்வோருக்கு கிட்டுமெனவும் அமைச்சர் கூறினார்.
இதற்கமைவாக பொதுவான அளவைக்கொண்ட தேங்காய் 130 ரூபாவுக்கும், சிறிய தேங்காய் 110 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னர் சதொச ஊடாக நாளாந்தம் 100,000 தேங்காய்களே விற்பனை செய்யப்பட்டன.
அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களிலுள்ள தேங்காய்கள், சதொச ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments