Vettri

Breaking News

அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு ஜப்பான் முழுமையான ஆதரவு !!




 ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பானிய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் திறம்பட தொடர்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீண்விரயம், ஊழலற்ற நாட்டை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்லும் அரசாங்கத்தின் புதிய கொள்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்த ஜப்பானிய தூதுவர், இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமாரவிற்கும் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார். 


No comments