Vettri

Breaking News

அனர்த்த நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா கோரிக்கை!!




 



( வி.ரி.சகாதேவராஜா)

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை துரிதப்படுத்துவதுடன், மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அபூபக்கர் ஆதம்பாவா  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதேவேளை ,அனர்த்த நிலைமை தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை மாவட்ட செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளை நேற்று (26) தொடர்புகொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட அனைத்து  மக்களுக்கும் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை, வெள்ளத்தினால் இழுத்து வரப்பட்டு சாய்ந்தமருதில் உள்ள கரைவாகு ஆற்று பாலத்தில் தேங்கி, வெள்ள நீர் வடிந்தோட தடையாக உள்ள சல்வீனியா தாவரங்களை அகற்றுமாறு கல்முனை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளரை பாராளுமன்ற உறுப்பினர் தொடர்புகொண்டு பேசியதன் காரணமாக, சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான கணரக வாகன உதவியுடன் சல்வீனியா அகற்றும் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments