நம்பிக்கை மிக்க பாராளுமன்றத்தை கட்டியெழுப்ப வேண்டும் - பிரதமர் தெரிவிப்ப!!
மக்களின் நம்பிக்கையை இழந்திருந்த பாராளுமன்றத்தை, மீண்டும் நம்பிக்கை மிக்கதாக கட்டி எழுப்புவது புதிய சபாநாயகரின் பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாத்து, மக்களுக்குப் பொறுப்புக் கூறும் இடமாக அதை மாற்றும் பொறுப்பும் புதிய சபாநாயகருடையது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதிய சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர், சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வலவுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகரை மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு,அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
இப்பதவிக்கு நீங்கள் மிகவும் பொருத்தமானவர்.
இது எங்கள் அனைவரினதும் கருத்தாகும். அரசியலில் மற்றும் நாட்டின் அரசியல் வரலாற்றில் மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து செயற்படும் தலைவர் நீங்கள்.
தூய்மையான அரசியல் கலாசாரத்திற்காக முன்னின்று உழைத்த நபராக நாம், உங்களை இனங்காட்ட முடியும்.
இவ்வாறான ஒரு பிரமுகர் இந்த புதிய பாராளுமன்றத்தில் சபாநாயகராக பதவி யேற்பதையிட்டு, மகிழ்ச்சியடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments