Vettri

Breaking News

துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!!




 மங்கலகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 25ஆவது மைல் கல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மங்கலகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு (23) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 51 வயதுடைய 25ஆவது மைல் கல் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மங்கலகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments