Vettri

Breaking News

பாண்டிருப்பில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்!








( வி.ரி.சகாதேவராஜா)

 பாண்டிருப்பு பிரதேசத்தில் சமகால வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையினர்  பாரிய மருத்துவ முகாம் ஒன்றை இரண்டு நாட்களாக நடாத்தினர்.

பாண்டிருப்பு பிரதேச மக்களுக்கான இவ் இலவச  மருத்துவ முகாம் கடந்த இரண்டு நாட்களாக  பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயத்தில் 
நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரங்க சந்ரசேன நேரடியாக சென்று தமது வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சகிதம் இம் மருத்துவ முகாமை திறம்பட நடாத்தினார்.

பெருந்திரளான மக்கள் அங்கு வந்து இரண்டு நாட்களும் தேவையான சிகிச்சையை பெற்றனர்.
உளவள ஆலோசனையும் வழங்கப்பட்டது.

No comments