Vettri

Breaking News

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது - அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அன்ரன்!




செ.துஜியந்தன்

இந்நாட்டில் லஞ்சம் ஊழலற்ற தூய்மையான ஆட்சியை நிலைநாட்டுவதற்கு அனைத்து மக்களும் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய மக்கள் சக்தியினதும், ஜனாதிபதி அனுரகுமாரா திசநாயக்காவின் கரங்களை பலப்படுத்த ஒன்றிணைந்துள்ளனர். இவ் வெற்றியில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களும் பங்கெடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின்  வேட்பாளர் ஓய்வுநிலை அதிபர் ஆர்.எம்.அன்ரன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசம் தம்பிலுவில் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது இதனை தெரிவித்தார்.

நாட்டில் தூய்மையான ஆட்சியை உருவாக்க சகல மக்களும் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளனர். இந்நிலையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களும் ஜனாதிபதி அனுரகுமாரா திசநாயக்காவின் கரத்தை பலப்படுத்த ஒன்றிணைய வேண்டும். திசைகாட்டியே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்று தரக்கூடிய கட்சியாகும்.  அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் காலம்காலமாக தமிழ் அரசியல் வாதிகளினால் ஏமாற்றப்பட்டே வருகின்றனர்.  உணர்சியூட்டக்கூடிய இனவாதக்கருத்துக்களை கூறி இங்குள்ள இளைஞர்களை தவறாகவே வழிநடத்துகின்றனர்.  தமிழ் மக்களை  உசுப்பேற்றிய காலம் மலையேறிவிட்டது. இனியும் தமிழ் மக்களை ஏமாற்றமுடியாது.


பாண்டிரு




அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எவ்வித அபிவிருத்தியும் இன்றி இருண்ட காலத்திற்குள் வாழ்கின்றனர். இம் முறை லஞ்சம் ஊழலற்ற கட்சி பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு திசைகாட்டிக்கு வாக்களிக்க வேண்டும். மாற்றத்தின் மூலம் அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்களை மேம்படுத்தவேண்டும். காலங்காலமாக எம்மை ஏமாற்றும் அரசியல் வியாபாரிகளிடம் இருந்து விழித்துக்கொள்ள வேண்டும் .பணத்திற்கும், பகட்டுக்கும் வாக்களிப்பதை விட்டு உண்மையான நேர்மையான மக்கள் பிரநிதியை இனங்கண்டு வாக்களிக்க வேண்டும். கடந்தகாலங்களில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து சத்தமில்லாமல் பல சேவைகளை செய்திருக்கின்றேன். இம்முறை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து திசைகாட்டிக்கு வாக்களித்து எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்போம் என அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அன்ரன் தெரிவித்தார்.

No comments