Vettri

Breaking News

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது !!




 சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (23) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் டுபாயில் இருந்து இலங்கை வந்துள்ளதுடன், அவரிடம் இருந்து 59,980 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொட்டாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments