Vettri

Breaking News

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்-அம்பாறையில் அடைமழை-மாணவர்கள் சிரமம்




 இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (25) ஆரம்பமாகவுள்ளது.அதன்படி இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு பரீட்சை நடைபெறவுள்ளது.


இம்முறை நாடளாவிய ரீதியில் 2,312 பரீட்சை நிலையங்களில்   உயர்தரப் பரீட்சைக்காக 333,185 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சார்த்தியின் கையொப்பத்தை தகுதியான ஒருவரால் சரிபார்க்க வேண்டியது அவசியமானது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.பரீட்சை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட  மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்திருந்தது. அந்த வகையில் கல்முனை, சம்மாந்துறை, கல்வி வலய மாணவர்கள்  ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு,பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments