Vettri

Breaking News

தமிழரசுக்கட்சியினை வடக்கிலும் கட்டியெழுப்ப தயார்- சாணக்கியன்!!




 தமிழரசுக்கட்சியினை வடக்கிலும் நாங்கள் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றோம். எங்களை அழைத்தால் அங்கு சென்று வடமாகாணத்திலும் தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்பவதற்கு தயாராகயிருக்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.


பொறுப்பினை தந்தால் தமிழரசுக்கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டியெழுப்பியதுபோன்று ஏனைய மாவட்டங்களிலும் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்கினைப்பெற்று வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினராக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுக்கு வரவேற்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று (23) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா, முனைக்காடு பகுதியில் மக்களினால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலைக்குடாவில் உள்ள ஆலயங்கள், கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து இந்த வரவேற்பினை வழங்கியது.
இதேபோன்று முனைக்காடு பகுதியிலும் ஆலயங்கள்,கிராம அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள் இணைந்து மாபெரும் வரவேற்பினை பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கியது.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலானது ஒரு சவால் மிக்க தேர்தலாக அமையும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் மட்டக்களப்பில் பெரும் சவாலாக வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சிக்கு வீட்டு சின்னத்திற்கு ஒரே ஒரு ஆசனம் தான் கிடைக்கும் என பலராலும் பேசப்பட்டது.

பலர் பல அச்சுறுத்தல்களை கொடுத்திருந்தார்கள் மட்டக்களப்பில் நீங்கள் ஒரு சில கொலைகார கட்சிகளை சேர்த்து எடுக்காவிட்டால் நீங்கள் இம்முறை ஒரு ஆசனத்தை பெறுவதும் கஷ்டமாக இருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் மூன்று ஆசனங்களை தட்டி விட்டு செல்வார்கள் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செல்ல போகின்றது என்று எல்லாம் கூறினார்கள் ஆனால் கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து மூளை முடுக்குகளுக்கும் சென்று மக்களோடு மக்களாக நின்றதன் காரணமாக என்னுடைய மனதில் தெரிந்திருந்தது நாங்கள் மட்டக்களப்பில் நிச்சயமாக நான்கு ஆசனங்கள் எடுக்கக்கூடிய அளவில் எமது ஆதரவு இருக்கின்றது என்பது எனக்கு தெரிந்து விடயம்.

இந்த நான்காவது ஆசனத்தை இழந்தது வெறும் 8,000 வாக்குகளினால் நான்காவது ஆசனம் பெறுவதற்கும் சில வழிகள் காணப்பட்டது. அந்த நான்காவது ஆசானம் பெற முடியாமல் போனது சில கட்சிக்குள்ளே இருக்கின்ற சிலர் அதாவது கட்சிக்குள் இருப்பவர்கள் என்பதை விட கட்சிக்கு எதிராக செயல்பட்டு என்னுடைய விருப்பு வாக்குகளை குறைக்க வேண்டும் என எடுத்த சில முன்னெடுப்புகளின் காரணமாகத்தான் அந்த 8,000 வாக்குகள் இல்லாமல் சென்றது அவர்கள் மௌனமாக இருந்திருந்தாலே 8,000 வாக்குகளுக்கு மேலதிகமாக கிடைக்கப் பெற்றிருக்கும்.

சில இடங்களுக்கு சென்று சாணக்கியனுக்கு வாக்கு செலுத்த வேண்டாம் என்று கூறியதனால் தான் அந்த இடத்திற்கு நான் சென்று இல்லை எனக்கு வாக்களிக்க வேண்டும் என நியாயப்படுத்தியதனால் வெளியில் இருக்கின்ற வாக்காளர்களை உள்ளே கொண்டுவர முடியாத சூழல் ஏற்பட்டது இல்லாவிட்டால் எமக்கு நான்கு ஆசனங்கள் கிடைக்கப்பெற்று.

மட்டக்களப்பில் நாங்கள் மூன்று ஆசனங்களை எடுத்து வரலாறிலே ஒரு சாதனை ஒன்றினை படைத்திருக்கின்றோம் அது இந்த முனைக்காடு கிராமத்தில் வசிக்கின்ற மக்களது பெரும்பான்மையில்தான் செய்தோம் என்பதனை பகிரங்கமாக கூறுகின்றேன்.

கடந்த தேர்தலில் ஒரு கட்சி ஐந்து மாவட்டங்களிலும் போட்டி போட்டு கிட்டத்தட்ட 50 வேட்பாளர்கள் சேர்ந்து 65,000 வாக்குகள் தான் பெற்றார்கள் நான் மட்டக்களப்பில் தனித்து நின்று அதைவிட 200 வாக்குகள் அதிகமாக பெற்றிருக்கின்றேன் அவ்வளவு கட்சிகள் கூறினார்கள் அந்த கட்சி இந்த கட்சி அவர்கள் அவ்வாறு இவர்கள் இவ்வாறு என்று எல்லாம் கூறினார்கள் ஆனால் மக்கள் இம்முறை மக்களின் மனநிலை கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள், கற்பழித்தவர்கள், கப்பம் வாங்கியவர்கள், தரகு வாங்கியவர்கள், மண் கடத்தியவர்கள் இவர்கள் அனைவரையும் நிராகரிக்க வேண்டும் என்று மக்கள் ஒரே அடியாக மட்டக்களப்பில் பார்த்தீர்கள் என்றால் வியாழேந்திரன், பிள்ளையான், கருணா, ஜனா, துறைரெட்னம் இவ்வாறு பெரிய பெயர்கள் இவர்கள் எல்லாம் 30 வருடங்களாக இந்த பிரதேசத்தில் பேசப்பட்ட பெயர்கள் முழு பெயரையும் மக்கள் துரத்தி விட்டார்கள்.

எமது கட்சியிலும் மூன்று ஆசனம் கிடைக்கப்பெற்றது எனது வாக்குகளினால் எமது கட்சியிலும் எனக்கு 65,000 வாக்குகள் எனக்கு அடுத்ததாக இருந்தவருக்கு 22,000 வாக்குகள் எனக்கு வழங்கப்பட்ட அந்த வாக்குகள் கிடைக்கப்பெறாமல் இருந்திருந்தால் எமது கட்சியிலும் ஒரு ஆசனம் தான் கிடைக்கப் பெற்றிருக்கும்.

ஆனால் நாங்கள் இதிலிருந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் தமிழரசு கட்சியை தனித்துவமாக நாங்கள் பலப்படுத்த வேண்டும் எனக்கு மற்றய மாவட்டங்களை பற்றி கூற முடியாது எதிர்வரும் காலங்களில் அந்த பொறுப்பு தரப்பட்டால் ஏனைய மாவட்டங்களை இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தை கட்டி எழுப்பியது போல ஏனைய மாவட்டங்களையும் கட்டி எழுப்ப தயார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த நான்கு வருடங்களாக நான் அம்பாறை, திருகோணமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பல சவால்களுக்கு முகம் கொடுத்தோம் அந்த மக்களோடு மக்களாக நின்று மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக செயல்பட்டோம் அதனால் தான் கிழக்கு மாகாணத்தில் அதிகளவு வாக்குகள் கிடைக்கப்பெற்று தமிழரசு கட்சிக்கு கிழக்கு மாகாணத்தில் ஐந்து ஆசனங்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது.

வடக்கையும் கட்டி எழுப்ப நாங்கள் தயார் வாருங்கள் என்று எம்மை அழைத்தால் அங்கும் சென்று வடக்கை கட்டி எழுப்ப நாங்கள் தயார் யாழ்ப்பாணத்திற்கும் வர தயார் வன்னிக்கு வருவதற்கும் தயார் அங்கும் வந்து மக்களுடன் மக்களாக நின்று தமிழரசு கட்சியை கட்டி எழுப்ப தயார்.

நாட்டில் ஜனாதிபதி அவர்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆசனங்களை பெற்றுவிட்டார் நாங்கள் உண்மையில் எதிர்பார்த்தது 105 ஆசனங்கள் தான் கிடைக்கப்பெறும் என்று சிங்கள மக்கள் வாக்களித்ததை பற்றி நாங்கள் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனம் வன்னியில் இரண்டு ஆசனம் என்றால் சிங்கள மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்களா? அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள் ஆனால் நாட்டில் ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க வந்திருக்கின்றார் அவருடைய கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க பெற்று இருக்கின்றது என்பதனை நாங்கள் பெரிய ஒரு பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஜனாதிபதி என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தார் என்னைக் கண்டு வந்து சந்தித்து கையை கொடுத்து "மட்டக்களப்பை மாத்திரம் தான் என்னால் பிடிக்க முடியாமல் போனது" என்று கூறினார் நான் கூறினேன் பிரச்சனை இல்லை நான் தானே அதனை பிடித்து இருக்கின்றேன் என்று கொலைகாரனோ கொள்ளைக்காரனோ பிடிக்கவில்லை நான் தான் பிடித்திருக்கின்றேன் என்றேன் பிரச்சனை இல்லை நாங்கள் சேர்ந்து வேலை செய்வோம் என கூறி இருக்கின்றேன்.

மக்களினுடைய குறைபாடுகளை கண்டறிந்து நாங்கள் தான் அதற்கு பாராளுமன்றம் வரை கொண்டு செல்வோம் பாராளுமன்றத்தில் தீர்வு காணப்படாவிட்டால் ஜனாதிபதி வரை கொண்டு செல்வோம் அங்கும் தீர்வு காண முடியாவிட்டால் சர்வதேசம் வரை கொண்டு செல்வோம்.

அதே போன்று எமது அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் நாங்கள் முன்னெடுப்போம் எங்களுடைய வரிப்பணத்தில் கிடைக்கின்ற அபிவிருத்திகளை எமது மக்களுக்கும் கிடைக்க வேண்டும் அதையும் நாங்கள் செய்வோம் ஆனால் எங்களுடைய மக்கள் நாங்கள் எவ்வாறு கூறுகின்றனோ ஜனாதிபதியினுடைய கட்சியும் அமைச்சரோ வந்து இப்போதுதான் வேலை பழகுகின்றார்கள் ஒரு மூன்று மாதம் கால அவகாசம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

நாட்டினுடைய புதிய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் தான் வரும் இப்போது இடைக்கால ஒரு வரவு செலவு திட்டத்தை முன்வைக்க போகின்றார்கள் அடுத்த மாதம் நான்காம் மாதத்தில் இருந்து தான் புதிய வரவு செலவுத் திட்டத்திற்கான வேலைகள் இடம் நான்காம் மாதத்திற்கு முன்னர் எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும் இடம்பெறப் போவதில்லை அதற்கு பின்னர் நாங்கள் பார்ப்போம்.

ஆனால் இந்த இடத்தில் இருந்து நாங்கள் கூறுவது ஜனாதிபதிக்கும் ஒரு எச்சரிக்கையாகவோ அல்லது ஒரு கருத்தாக கூறலாம் ஜனாதிபதி சரியாக செயல்படுவாராக இருந்தால் அவர் செய்கின்ற அனைத்து விடயங்களையும் நாங்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை நல்ல விடயங்களை நாங்கள் ஆதரிக்கலாம் ஆனால் தமிழ் இன விரோத செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் ஆனால் அதனை நாங்கள் அனுமதிக்க முடியாது.

தமிழ் இனம் ஒரு தனித்துவமான இடம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் இதில் நாங்கள் மாறப்போவதில்லை ஜனாதிபதியும் எங்களை மாற்ற நினைக்க கூடாது என்பதனை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

No comments