Vettri

Breaking News

பாலமுனை பாலமுருகன் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா; மட்டு அம்பாறை விஞ்ஞான ஒன்றியம் ஏற்பாட்டு!







(வி.ரி.சகாதேவராஜா)

மட்டு.அம்பாறை விஞ்ஞான ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் 2வது திறன் வகுப்பறை திறப்பு விழா நேற்று முன்தினம் ( 22/11/2024) பட்டிருப்பு வலயத்தில் உள்ள பாலமுனை பாலமுருகன் வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் நா. புவீந்திரன்  தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி. சிறிதரன்  பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கிராம புற மாணவ செல்வங்களுக்கும் தொழில்நுட்ப சாதனங்களினூடாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் 
இத் திறன் வகுப்பறை அமைக்கப்பட்டு வருகிறது.

இவ் வகுப்பறைக்கான நிதியுதவி அமரர். க. தேவா நினைவாக அவரது குடும்பத்தினரால் (USA)  மனித நேயம் அமைப்பின் ஒருங்கிணைப்பில் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் நெறிப்படுத்தலில் அமைத்துக் கொடுக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் ஸ்தாபகர் மற்றும்  இணைப்பாளர் வ.யதுர்ஷன், விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் தலைவர் தி.கோபிநாத்,  பொருளாளர் ந. லோகிதன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி. இன்பராஜா, பாடசாலையின் உப அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விஞ்ஞான ஒன்றிய அமைப்பின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்  கிலசன், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

மனித நேயம் அமைப்பின் இச் சேவையை பாராட்டி பாடசாலை சமூகத்தினால் வ.யதுர்ஷன் அவர்களுக்கும்  விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் சேவையை பாராட்டி  கோபிநாத் அவர்களுக்கும் பாடசாலை சமூகத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments