அமைச்சுப்பதவிகளுக்காக தமிழரசுக்கட்சியை தந்தை செல்வா உருவாக்கவில்லை! அமைச்சு பதவிக்காக எனில் தமிழரசுகட்சிக்கு எவரும் வாக்களித்தேவையில்லை -அரியம் காட்டம்!!
( வி.ரி.சகாதேவராஜா)
அமைச்சுப்பதவிகளுக்காக தமிழரசுக்கட்சியை தந்தை செல்வா உருவாக்கவில்லை!
அமைச்சு பதவிகளுக்காக தமிழர்விடுதலை கூட்டணி உருவாகவில்லை,
அமைச்சு பதவிகளுக்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தலைவர் ஆரம்பிக்கவில்லை. எனவே அமைச்சு பதவிக்காக தமிழரசுகட்சிக்கு எவரும் வாக்களித்தேவையில்லை!!
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அமைச்சு பதவியையிட்டு பரிசீலிக்கலாம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 2001, தொடக்கம் 2015 வரை அனைத்து பாராளுமன்ற தேர்தல்களில் 15, 22,15,16 என ஆசனங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்தது தமிழ்தேசியம் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் 2015, ல் நல்லாட்சி அரசில் 16, ஆசனங்கள் கிடைத்து எதிர்கட்சி தலைவர் பதவியும் எமக்கு கிடைத்து.
அதில் இணக்கப்பாடு அரசியல், அபிவிருத்தி அரசியல் என்று வடகிழக்கில் எட்டு நிர்வாக மாவட்டங்களிலும் அபிவிருத்தி குழு தலைவர் பதவிகள் கிடைத்தும் பாரிய அபிவிருத்திகள் வேலைவாய்ப்புகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்எடுத்தும் என்ன நடந்தது..?
அதன் பிரதிபலிப்பு 2020, பொதுத்தேர்தலில் 16, ஆசனங்கள் 10, ஆக குறைந்தது, அதற்கான மூலகாரணம் அரசுடன் சோரம் போனதால்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.?
சும்மா கிடந்த கஜேந்திரகுமார் சைக்கிள் கட்சிக்கு இரண்டு ஆசனமும், விக்கினேஷ்வரனுக்கு ஒரு ஆசனமும் 2020, ல் யாழ்மாவட்ட தமிழ்தேசிய கொள்கையுள்ளவர் வாக்களித்து எமது ஆதரவை குறைத்தனர் அல்லவா..?
அமைச்சு பதவிக்காக, சலுகை அரசியலுக்காக, பதவிக்காக எனில் தமிழரசுகட்சிக்கு எவரும் வாக்களித்தேவையில்லை,
அனுரவின் திசைகாட்டிக்கும், பிள்ளையானின் படகுக்கும், மோகனின் மாட்டுக்கும், டக்லசின் வீணைக்கும், அங்கயனின் தபால் பெட்டிக்கும், உமாசந்திரபிரகாசின் ரெலிபோனுக்கும் இதர அரச கைக்கூலி கட்சிகளுக்கும் வாக்களிக்கலாம் .அந்த கட்சிகளுக்கும் எமது தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதற்கும் என்ன வித்தியாசம்..?
சுமந்திரன் விரும்பியபடி கதைப்பதெல்லாம் மரக்கட்டைகளான சிலர் கேட்டு தலையாட்டலாம்.
ஆனால் மக்களுக்கு தெரியும்..!
தேர்தல் விஞ்ஞாபனம் இதுவரை வெளியிடவில்லை, அஞ்சல் மூல வாக்களிப்புக்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட முடியாமல் நாம் உள்ளோம்.
சிலவேளை சுமந்திரன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அமைச்சுபதவி, அபிவிருத்திகளை பற்றி குறிப்பிட்டாலும் ஆச்சரியம் இல்லை.
மட்டக்களப்பில் தமிழரசுகட்சிக்கு இம்முறை கட்டாயம் மூன்று ஆசனங்கள் கிடைக்கும்.
சுமந்திரனின் இவ்வாறான கருத்துகளால்தான் பாதிப்பு ஏற்படும் .!
No comments