எனது சேவைக்கு அங்கீகாரம் தாருங்கள்! சங்கு வேட்பாளர் பிரகாஷ் வேண்டுகோள்!!
( வி.ரி.சகாதேவராஜா)
' விதைத்தவன் உறங்குகிறான். முளைக்கத் துடிக்கும் விதை, சிந்திய குருதி வெல்வது உறுதி '
கடந்த 20 வருடங்களாக மக்களோடு நின்று யான் செய்த சேவைக்கு அங்கீகாரம் தாருங்கள்.
இவ்வாறு விநாயகபுரத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் இராஜகுமார் பிரகாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
2009 தொடக்கம் வைத்தியதுறையில் கடமையாற்றியுள்ளேன். திருக்கோவில்,
பாண்டிருப்பு, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் தனியார் வைத்தியசாலைகளை
ஆரம்பித்து எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளேன்.
அத்தோடு வண்பொருளகங்களுக்கு பொருட்களை விநியோகிக்கும்
தொழிலும் செய்து வருகின்றேன். இவை அனைத்திற்கும் அப்பால் நான் அங்கம் வகிக்கின்ற அமைப்புகளாக.
- முதலுதவி, அனர்த்த முகாமைத்துவம் போன்ற பயிற்சிகளின் வளவாளராக செயற்படல்.
- இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராகவும்,
- அம்பாறை மாவட்ட மனித உரிமை மீறல் சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் அம்பாறை மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் முக்கியஸ்தராகவும்,
- சனாதிபதி விருதுபெற்ற சாரணராகவும், சாரணத் தவைராகவும் செயற்படுதல்.
- தேசிய இளைஞர் சம்மேளனங்களின் முன்னால் தலைவராகவும்
அமைப்பினூடாக விசேட தேவையுள்ள பிள்ளைகளுக்காகவும், இளைஞர் கழகங்களுக்காகவும்
இன்று வரை அயராது உழைத்துக்கொண்டிருக்கின்றேன்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்.
கடந்த 20 வருடங்களாக மக்களோடு
சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களினுடாக காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் பணிகள்.
- பாண்டிருப்பு யூத் விளையாட்டுக் கழக உப தலைவராகவும்
- சொறிக்கல்முனை 'நாம் வளர' மேம்பாட்டுப் பேரவையின் ஆலோசகராகவும்
- இன்னும் பல அமைப்புகளிலும் செயற்பட்டு வருகின்றேன்.
- உடும்பங்குலப் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவராகவும
- கிழக்கு மாகாண மருத்துவ மக்கள் பேரவையின் பொதுச் செயலாளராகவும்
பிரித்தானிய, ஐரிஸ், அவுஸ்ரேலியன், சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கங்கள் ஊடாகவும், எகட்
அமைப்பினூடாகவும் இரண்டு மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான வீடுகள் அமைத்துக்
கொடுக்கப்பட்டன. குறிப்பாக வாகரை, வாழைச்சேனை, தலவாய், தன்னாமுனை, சுவிஸ்கிராமம்,
பணிச்சையடி ஓந்தாச்சிமடம், நீலாவனை, குருந்தையடி தொடர்மாடிகள், காரைதீவு, ஆலையடிவேம்பு
பொத்துவில் .
2006 ஆம் ஆண்டு திருகோணமலை சம்பூர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம்களை
அமைத்து உணவு, நிவாரணம் போன்றவற்றை ஏற்படுத்தி கொடுத்துள்ளேன்.
2010 ஆம் ஆண்டு பாரிய வெள்ளப்பெருக்கின் போது படகு மூலமாகவும், உலங்குவானூர்தி
மூலமாகவும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி உணவு, நிவாரணம் போன்றவற்றை செஞ்சிலுவைச்
சங்கத்தினுடாக பெற்றுக்கொடுத்துள்ளேன்.
அன்பார்ந்த என் உயிருக்கும் மேலான தமிழ் பேசும் உறவுகளே என்னை உங்களது மகனாக, அண்ணனாக,
தம்பியாக நினைத்து மக்களோடு வீதியில் நின்று அரசியல் களமாடுவதற்கு எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை தந்து
அரசியலில் எனது கன்னி முயற்சியை வாழ்த்தி, வாக்களியுங்கள் என்றார்.
No comments