உயர்தரப் பரீட்சை உரிய நேரத்தில் நடைபெறும்!!
பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் (25) ஆரம்பமாகும் என கல்வியமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.எனினும், உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான முன்னோடி ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த மார்ச்சில் இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்ததாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் பரீட்சை நடைபெறும் திகதிகளுக்கு அமைய, அடுத்துவரும் கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சை உள்ளிட்ட பல பரீட்கைகளுக்கான திகதிகள்,ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால், ஏனைய பரீட்சைகளுக்கான திட்டமிடல் முற்றிலும் ஒழுங்கற்றதாக மாறிவிடும் என்றும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
No comments