Vettri

Breaking News

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!




 பாடசாலை கல்வி மற்றும் தகவல் தொடர்பாடலுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தரவினால் அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையில், கொவிட்-19 தொற்று பரவலின் போது மாணவர்கள் தவறவிட்ட கற்றல் வாய்ப்புகளை மீட்டெடுக்க உதவும் வகையில் வாட்ஸ்அப், வைபர் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அவை இன்றும் மாணவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மாணவர்கள் இந்த சமூக ஊடக செயலிகளை பயன்படுத்துவதால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றனர். இதனால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments