Vettri

Breaking News

கல்முனையில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா பங்கேற்றபிரதேச அனர்த்த ஒருங்கிணைப்பு கூட்டம்!!






( வி.ரி.சகாதேவராஜா )

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை, மற்றும் கல்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட அனர்த்த கட்டுப்பாடு மற்றும் மீட்பு முகாமைத்துவ ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று  புதன்கிழமை (27) கல்முனை மாநகர சபை கூட்ட மண்பத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டு அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை தொடர்பான முன்னேற்ற மற்றும் மீளாய்வு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், மாநகர உதவி ஆணையாளர், உதவி பிரதேச செயலாளர், கல்முனை மாநகர பொறியியலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர், பொலிஸ் மற்றும் முப்படை உயர் அதிகாரிகள், காலநிலை மாற்றம் குறித்த துறையில் பணியாற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா, பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ குழுவினர் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இதன்போது சீரற்ற காலநிலை, மழை மற்றும் வெள்ளம் காரணமாக கல்முனை, மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்தல், இடைத்தங்கள் முகாம்களில் உள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கல், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை பற்றிய மீளாய்வு, அனர்த்த நிலை அதிகரிக்குமிடத்து பாதிப்புகளை குறைப்பதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆலோசனைகள், எதிர்கால திட்டமிடல்கள் குறித்து இங்கு கலந்தாலோசிக்கப்பட்டது. 

கல்முனை, மற்றும் கல்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களை இணைத்து ஒரே இடத்தில், அனர்த்த முகாமைத்துவ கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக இவ்வாறானதொரு கூட்டம் நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.

No comments