Vettri

Breaking News

வாக்களிப்பு நிலையங்களைப் படமெடுத்தல் குறியிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுப்பது, அவற்றை சமூக வலைதளங்களில் பகிந்தால் சட்ட நடவடிக்கை!!




 வாக்குப்பதிவு தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளையும் புகைப்படம் எடுப்பதையோ அல்லது வீடியோ பதிவு செய்வதையோ, அதுபோன்ற படங்களையோ அல்லது வீடியோக்களையோ சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதையோ தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

வாக்களிப்பு நிலையங்களைப் படமெடுத்தல் குறியிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுப்பது, அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்வது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் என்று ஆணைக்குழு ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த வழிகாட்டுதல்களை புறக்கணிப்பவர்கள் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

No comments