தாண்டியடியில் தமிழரசு வேட்பாளர் ஜெயசிறிலை ஆதரித்து இடம் பெற்ற கூட்டம்:பெருமளவான மக்கள் பங்கேற்பு!!
( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் இல 05 இல் போட்டியிடும் காரைதீவு பிரதேச முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலை ஆதரித்து திருக்கோவில் தாண்டியடியில் பொதுமக்களாலும்
இளைஞர்களாலும் அமோக வரவேற்புடன் ஆதரவு கூட்டம் நேற்று (09) சனிக்கிழமை மாலை இடம் பெற்றது.
இதில் கலந்துகொண்ட வேட்பாளர் ஜெயசிறிலுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இளைஞர்களும் இணைந்து அமோக வரவேற்பளித்ததுடன் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர்.
அங்கு சமூகமளித்திருந்த ஹரேராமா ஹரே கிருஷ்ணா அமைப்பின் மதபிரமுகர் பிரபு உரையாற்றுகையில்..
நாங்கள் அரசியலில் ஈடுப டுபவர் அல்ல . ஆனால் அரசியலையும் ஆன்மீகத்தையும் சரியாக மக்களுக்கு சேவையும் செய்கின்ற ஜெயசிறில் அவர்களை நாம் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.
இவர் தேர்தலுக்காக வந்தவர் அல்ல
ஆனால் இவ்வளவு காலமாகவும் இந்த பிரதேசத்திலேயே இருந்தவர். மக்களுக்கு நிறைய செய்திருக்கின்றார்.
பாராளுமன்றம் அனுப்புங்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்புவேன் என்ற உங்களுடைய சபதம் சரியாக இருந்தாலும் அனைத்து பிரதேசத்தில் இருக்கின்ற மக்களை செய்து வாக்களிக்க சொல்லி அவரை சிம்மாசனம் ஏற்றினால் அவருக்கு பதிலாக நாங்கள் சிம்மாசனம் ஏறியதற்கு சமன்.
அவர் தலைவராக இருந்த மீனாட்சியம்மன் ஆலயம் இன்று சிறப்பாக விளங்குகின்றது. நாங்கள் போய் நேரடியாக பார்வையிட்டோம்.
கொரோனா காலகட்டத்திலே அவர் பல உதவி களை செய்துள்ளார்
No comments