மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்கவும் - ஐக்கிய மக்கள் காங்கிரஸ் தலைவர் அஹமட் புர்க்கான்!!
மாகாண சபைகளுக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்கவும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொண்ட அரசாங்கம் என்ற வகையில் மாகாண சபைகள் முறைமையை முற்றாக இல்லாமல் செய்துவிட்டு மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் தலைவர் அஹமட் புர்க்கான் மேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் வட்டார முறைமையை நீக்கிவிட்டு விகிதாசார முறைமையிலான திருத்தங்களுடன் காலதாமதமின்றி உடனடியாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையும் நடாத்தி முடிக்குமாறும் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் பாதுகாப்பிற்கு மதிப்பளிக்குமாறும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக மேலும் தெரிவித்தார்.
No comments