Vettri

Breaking News

சம்மாந்துறையின் எல்லைக் கிராமங்களை உள்ளடக்கிய புதிய பிரதேச சபையை மல்வத்தையில் அமைப்பேன் -புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஜெயச்சந்திரன் சூளுரை!!





( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறையின் எல்லைக் கிராமங்களை உள்ளடக்கி உருவாக்கும் பிரதேச சபையை மல்வத்தையில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

வரும் புதிய ஜனநாயக முன்னணியின்( கேஸ் சிலிண்டர் )அம்பாறை மாவட்ட  வேட்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளருமான செயல்வீரன் வெள்ளி ஜெயச்சந்திரன் சூளுரைத்தார் .

வளத்தாபிட்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்..

தற்போது இடம்பெறும் 2024 ம் வருட பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நானும் ஒரு வேட்பாளராக
ஐக்கிய தேசியக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல பிரதான கட்சிகள் ஒன்று இணைந்து உருவாக்கி செயல்படுகின்ற முன்னாள் ஜனாதிபதிகளான கௌரவர் ரணில் விக்கிரமசிமங்க கௌரவ சந்திரிகா அம்மையார் கௌரவ முன்னால் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகிய பல திறமைமிக்க தலைவர்களின் தலைமையிலான
புதிய ஜனநாயக கூட்டணியின் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் 9 இலக்க வேட்பாளராக
அம்பாறை மாவட்டத்தின் ஒரு தமிழ் வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.

இத்தனை தமிழ் வேட்பாளர்கள் தமிழ் கட்சிகள் இருக்கும்போது நீங்களுமா?  என நீங்கள் கருத கூடும் அது நியாயமானதே....
இருந்தாலும் இத்தேர்தலில் போட்டி இடுகின்றவர்கள் என்ன செய்துள்ளார்களோ தெரியாது....
தேர்தலில் வென்று எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார்களோ தெரியாது....

ஆனால் நான் கடந்த காலத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் உபதவிசாளர் என்ற வகையில் பல அரிய சேவைகளை, உரிமை சார் விடயங்களை, சமூகத்திற்கு ஏற்படும் அநீதிகளுக்காக குரல் கொடுத்து வந்தேன் வருகிறேன்.

அவற்றில் ஒரு சிலவற்றை சொல்லத்தான் வேண்டும்
நமது பிரதேச வைத்தியசாலைகளின் தரம் உயர்வு*
நமது பிரதேச பாடசாலைகளின் தரம் உயர்வு*
*மல்வத்தை பிரதேசத்தில் திறக்க இருந்த சாராய பார் நிறுத்தம்
சம்மாந்துறையின் எல்லை கிராமங்களை உள்ளடக்கி உருவாக்கும் பிரதேச சபையை மல்வத்தையில் அமைக்க வேண்டும்.
வளத்தாப்பிட்டி, மல்வத்தை, வீரமுனை ஆகிய மூன்று வட்டாரங்களையும் இரண்டு வட்டாரங்களாக குறைக்க விளைந்த போது அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றமை.
நமது மக்களின் குடியிருப்பு காணி பிரச்சினை
ஒரு காலகட்டத்தில் மாவட்டத்தின் மலக்கழிவுகளை வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் பிரதேசத்தில் கொண்டு வந்து கொட்ட விளைந்த போது தடுத்து நிறுத்தியமை.
அதேபோன்று மாவட்டத்தின் குப்பை கழிவுகளை வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் பிரதேசத்தில் கொண்டு வந்து கொட்ட விளைந்த போது மக்களை ஒன்று நினைத்து தடுத்து நிறுத்தியமை.

இப்படி எத்தனையோ விடயங்களை கூறலாம்.

இதற்கு மேலதிகமாக கீழ் குறிப்பிடப்படும் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை
அம்பாறை மாவட்டம் அடங்கலாக நான் முன்னெடுத்து இருக்கிறேன்.அவற்றில் ஒரு சில.

*அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவு*

பழைய வளத்தாப்பிட்டி  கிராமம்.

01.
வளத்தாப்பிட்டி அ.த.க. பாடசாலையின் சுற்று மதில் மற்றும் பாடசாலைக்குறிய தளபாடங்கள் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

02.
கிராமத்தின் பல உள்விதிகளை கொன்கிரீட் இட்டு செப்பனிட்டு  அமைத்துக் கொடுத்துள்ளேன்.

03.
வளத்தாப்பிட்டி கிராமத்தின் பிரதான வீதி பகுதிக்கு led மின் விளக்குகள் எனது சொந்த நிதியில் பொருத்திக் கொடுத்துள்ளேன்

04.
மரண வீடுகளில் பயன்படுத்துவதற்காக தகரக் கூடாரம் (கொட்டில்)ஒன்றினை எனது சொந்த நிதியில் செய்து கொடுத்திருக்கிறேன்

05.
மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் 15 குடும்பங்களுக்கு மீன்பிடி வலைகள் பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.

06.


வாழ்வாதாரத் திட்டமாக கொங்கிரீட் இடும் வேலையில் ஈடுபடும் 15 பேர் கொண்ட இரண்டு குழுக்களுக்கு தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு தொகுதி கொங்கிரீட் கலவை இயந்திரங்களை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

7.
வளத்தாப்பிட்டி கிராமத்தின் குலத்திற்கு அருகில் இருக்கும் நிலப்பகுதியை கிராமத்தின் விளையாட்டு மைதானத்திற்காக பெற்று அதனை அபிவிருத்தி செய்து வருகிறேன்

8.
மலசலக்கூடங்கள் அமைத்துக் கொடுத்துள்ளேன்

9.
கொடுத்த வாக்குறுதியின் படி எனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து சகோதரி குலமணி அவர்களை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராக ஆக்கினேன்.

10.
விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

அதே போன்று மல்வத்தை பிரதேசத்திலும் எனது சேவைகள் தொடர்கிறது.

அதில் ஒரு சில

01.
மல்வத்தை இலங்கை வங்கி (முன்னாள் அமைச்சர் கௌரவ பி. தயாரத்ன அவர்களின் இணைப்பாளராக நான் இருந்தபோது அவர் ஊடாக 2013 ம் வருடம்)

02.
மல்வத்தை பிரதான வீதியின் மின் விளக்கு கட்டமைப்பு.

03.
மல்வத்தை ஆயுர்வேத வைத்தியசாலை.

04.
மல்வத்தை தாய் சேய் நலன் சிகிச்சை நிலையம் (கிளினிக் சென்டர்)

05.
மல்வத்தை சந்தை

06.
மல்வத்தை பிரதேச சபை உப அலுவலகத்தில் அமைந்துள்ள நூலகம்

07.
மல்வத்தை - 01 கிராம சேவகர் பிரிவில் தற்போதும் இடம் பெற்று வரும் 10 லட்சம் ரூபாய் பெருமதியான வீட்டு திட்டம் (2014 ம் வருடம் கேம்ப் வளவுகளுக்கான வீட்டு திட்டம் கோரப்பட்டு முன்னாள் அமைச்சர் கௌரவ பீ.தயாரத்ன அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் அது தற்போதும் நடைபெறுகிறது. நான் எடுத்த முயற்சி தற்பொழுது சம்மாந்துறையில் பல பகுதிகளிலும் இவ்விட்டுத்திட்டம் நடைபெறுகிறது).

08.
மல்வத்தை பிரதேசத்தை சூழவுள்ள  பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு மல்வத்தைப் பிரதேசத்திற்கு குடிநீர் வழங்கப்படாது இருந்த நிலையில் அதற்காக தலைமை ஏற்று செயல்பட்டு குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்தது. 

09.
மல்வத்தை வைத்தியசாலையை தரம் உயர்த்த பங்களிப்பு செய்தது. அபிவிருத்தி செய்ய தற்போதும் முயன்று வருவது.

11.
மல்வத்தை, புது நகரம், கணபதிபுரம், மஜித்புரம், தம்பிநாயகபுரம்,
திருவள்ளுவர் புரம் உட்பட மல்வத்தை பிரதேசத்தின் பல உள் வீதிகளை கொங்கிரீட் இட்டு செப்பனிட்டு அமைத்துக் கொடுத்தது.

12.
மல்வத்தை விபுலானந்த மகா வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்தை திருத்துவதற்கு மற்றும் தளபாடங்கள் கொள்வனவு செய்தற்கு நிதி உதவி பெற்று கொடுத்தது.

13.
மல்வத்தை சீர்பாத தேவி வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடங்களை திருத்துவதற்கு நிதி உதவி பெற்று கொடுத்தது.

14.
மல்வத்தை திருவள்ளுவர் புரம் மைதானத்தினை திருத்தம் செய்வதற்கு தடுப்பு வேலி அமைப்பதற்கு நிதி உதவி பெற்றுக் கொடுத்தது.

15.
திருவள்ளுவர் புரம் விஷ்ணு கோவிலை அமைக்க நிதி பெற்று கொடுத்தது.

16.
மல்வத்தை ஆட்டோ சங்கத்தினை பதிவு செய்ய  உதவியது.

17.
வாழ்வாதாரத் திட்டமாக கொன்கிரீட் இடும் வேலையில் ஈடுபடும் 15 பேர் கொண்ட இரண்டு குழுக்களுக்கு தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு தொகுதி கொங்கிரீட் கலவை இயந்திரங்களை பெற்றுக் கொடுத்துள்ளேன்

18.
மலசல கூடங்கள் அமைத்துக் கொடுத்துள்ளேன்

19.
பிரதேசத்தின் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் பெற்றுக் கொடுத்துள்ளேன்

20.
தம்பி நாயக புரம் கிராமத்தில் சூர்யா பவுண்டேஷன் ஊடாக கட்டப்பட்ட வீடுகள் கிணறு வாழ்வாதார திட்டங்கள்.

பிரதேசத்தின் ஆலயங்கள் சங்கங்கள் என பலவற்றுக்கும் கடந்த காலத்தில் உதவிகள் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

இப்படி எத்தனையோ விடயங்களை மல்வத்தை பிரதேசத்திற்கு செய்து இருக்கிறேன். செய்து வருகிறேன்.

விரும்பினால் எனக்கு வாக்குகளை அளியுங்கள்.என்றார்.



No comments